கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் கொரோனாவால் 140 பேர் பலி

140 பேர் உயிரிழப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆறாயிரத்து 416பேர் பாதிக்கப்பட்டதோடு, 140பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக நான்கு இலட்சத்து 81ஆயிரத்து 630பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 13ஆயிரத்து 799பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 75ஆயிரத்து 885பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 676பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மூன்று இலட்சத்து 91ஆயிரத்து 946பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவல் அதிகரிகத்து வருவதால் பல்வேறு மாகாணங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க்பபட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழா நெருங்கி வரும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.