அமேசான் மழைக்காடு 150 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை

நியூயார்க்: புதிய அறிக்கை வெளியானது... உலகின் நுரையீரல் என கூறப்படும் ‘அமேசான் மழைக்காடு’, முந்தைய ஆண்டை விட டிசம்பரில் 150 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.

தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தனது கடைசி மாதத்தில் பதவியில் இருந்தபோது இறுதி இருண்ட அறிக்கையை வழங்கினார். தேசிய விண்வெளி முகவரகத்தின் டிடெ;டர் கண்காணிப்பு திட்டத்தின் அறிக்கையின் படி, கடந்த மாதம் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் பிரேஸிலின் பங்கில் 218.4 சதுர கிலோமீட்டர் (84.3 சதுர மைல்) காடுகள் அழிக்கப்பட்டதை செயற்கைக்கோள் கண்காணிப்பு கண்டறிந்துள்ளது.

மேலும், டிசம்பர் 2021இல் அழிக்கப்பட்ட 87.2 சதுர கிலோமீட்டர் (33.7 சதுர மைல்கள்) இலிருந்து 150 சதவீதத்திற்கும் மேலாக பரப்பளவு அதிகரித்துள்ளது. இதுதவிர, பிரேஸிலிய அமேசானில் சராசரி வருடாந்திர காடழிப்பு முந்தைய தசாப்தத்தை விட 75.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜனவரி 1ஆம் திகதி ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவால் போல்சனாரோ, வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், ‘போல்சனாரோவின் அரசாங்கம் முடிவடைந்திருக்கலாம், ஆனால் அவரது துயரமான சுற்றுச்சூழல் மரபு இன்னும் நீண்ட காலத்திற்கு உணரப்படும்’ என்று சுற்றுச்சூழல் குழுக்களின் கூட்டணியான காலநிலை கண்காணிப்பு அமைப்பின் நிர்வாக செயலாளர் மார்சியோ அஸ்ட்ரினி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.