இந்தியாவில் புதியாக 228- பேருக்கு கொரோனா

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.71 கோடியாக உயர்வு.

இதையடுத்து சீனாவில் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 288- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 4 உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.01 ஆகவும் கொரோனாவில் இருந்து மட்டும் குணம் அடைவோர் விகிதம் 98.80 சதவிகிதமாகவும் உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,503- ஆக உள்ளது.