தமிழகத்தில் செப்.4 வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சென்னை: திருவிழா மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் செப்.4 ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயங்கும் ...தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது வேளாங்கண்ணி திருவிழா, முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அடுத்த 4 நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயங்க இருப்பதாக போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் மோகன் அறிவித்து உள்ளா

அதாவது, சென்னையிலிருந்து அடுத்த 4 நாட்களுக்கு பிற ஊருக்கு செல்வதற்கு 150 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களிலிருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கு 100 சிறப்பு பேருந்துகளும் என்று மொத்தமாக 250 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் இருந்தும் முக்கிய ஊர்களுக்கு செல்வதற்கு முன்பதிவு சேவைகளும் துவங்கப்பட்டு இருக்கிறது. இதனால், நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள் தற்போதே ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.