புனித வெள்ளி ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு... அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு

கலிபோர்னியா: அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு... புனித வெள்ளி ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வடக்கு அயர்லாந்திற்கு முறைப்படி அழைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க கலிபோர்னியா சென்றிருந்த ரிஷி சுனக் அங்கு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்த மாத ஆண்டு விழாவை நினைவுபடுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் மிக முக்கியமான மைல்கல் என்று இதுவென ரிஷி சுனக் விவரித்தார்.

பிரதமர் ரிஷி சுனக் மேலும் கூறுகையில், ‘ஜனாதிபதி ஒரு கட்டத்தில் அயர்லாந்திற்கு வர ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் கூறுவதாக எனக்குத் தெரியும்.

ஆனால் முதல் நிகழ்வாக புனித வெள்ளி ஆண்டு விழாவைக் கொண்டாட வருமாறு அவரை முறைப்படி அழைப்பேன். அவரால் அதை செய்ய முடியும் என்று நம்புகிறேன்’ என கூறினார்.

பிரெக்சிட், குறிப்பாக வடக்கு அயர்லாந்து நெறிமுறை ஆகியவற்றால் ஏற்படும் சிக்கல்களின் விளைவாக வடக்கு அயர்லாந்தில் அமைதியை சீர்குலைக்கக்கூடாது என்று பைடன் முன்பு எச்சரித்தார்.