கர்நாடகாவில் புதிதாக 2,627 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் கொரோனா குறைவாக இருந்த கர்நாடகா தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 2,627 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 38,843 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளதால், அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 684 ஆக உயந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 693 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,409 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடைய 22,746 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா பரவலை சமாளிக்க முடியாமல், கர்நாடக அரசு அவதியடைந்து வருகிறது. இருப்பினும் பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.