சீனாவில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்: 37 சிறுவர்கள் காயம்

சீனாவின் குவின்சி சுஹாங் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்தனர்.

கத்திக்குத்து தாக்குதல் குறித்த விபரம் வருமாறு:- சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் கத்தியால் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 குழந்தைகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் அப்பள்ளியில் காவலராகப் பணியாற்றியவர் என்றும் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த அனைவரும் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஆரம்பப் பள்ளியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.