நைஜீரியாவில் தானாகவே கோடீஸ்வரர் ஆகிய 4 மாத குழந்தை

நைஜீரியா நாட்டை சேர்ந்த லவுராய்கிஜி என்ற பெண் எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார். நான்கு மாதங்களுக்கு முன் இவருக்கு பெண்குழந்தை பிறந்தது. அவரது மகளின் பெயர் லவுரல்.

தற்போது, லவுரல் தானாகவே தனது திறமையை கொண்டு கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என அவரின் தாய் லவுராய்கிஜி ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் இனுபுலியன்சர் மூலமே குழந்தை கோடீஸ்வரர் ஆகியுள்ளதை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து லவுராய்கிஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்ஸ்டாகிராமில் அதற்குள் மிக பிரபலமாகி என் மகள் கோடீஸ்வரர் ஆகி தூதர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். என்னையே அதற்குள் அவர் முந்தி விடுவார் போல் இருக்கிறது, இந்த வயதிலேயே பெரிய வேலை தான் என்று பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மிக பிரபலமான லவுராவின் மகள் லவுரலின் புகைப்படங்களை வைத்து செய்யப்படும் விளம்பரங்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன. இதனால் தான் அவருக்கு தூதர் ஒப்பந்தத்தை பெரும் இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.