பாகிஸ்தானில் 40 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர்

நியூயார்க்: உலக வங்கி தகவல்... பாகிஸ்தானில் கிட்டதட்ட 40 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த மக்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பரிதவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டுக்குள் 34 சதவீதமாக இருந்த பாகிஸ்தானின் வறுமைக் கோட்டின் அளவு இப்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

32 முதல் 40 சதவீதம் வரை ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான்அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலகவங்கி வலியுறுத்தியுள்ளது