ராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்பு பணிக்கு மட்டும் ரூ.59 கோடி செலவு

பிரிட்டன்: ரூ.59 கோடி செலவு... பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் ரூ.59 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் வரலாற்றில் ஒரு நாள் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிக அளவிலான தொகை செலவிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை எனவும் நியூயார்க் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. பிரிட்டனின் நீண்டகால ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி காலமானார். ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டருக்கு கொண்டுவரப்பட்டது.


அங்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடந்தது.ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸடரிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டா் அபேக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் கலந்துகொண்டு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் லண்டனில் குவிந்துள்ளதால், ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலத்திற்கு அதிக அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகளுக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 59 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டன் புலனாய்வு அமைப்புகள், லண்டன் நகர காவல் துறை, ரகசிய சேவையைச் சேர்ந்த பலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


லண்டன் காவல் துறையின் கீழ் வழங்கப்படும் மிகப்பெரிய பாதுகாப்புப் படலம் இது என நியூயார்க் முன்னாள் அரச பாதுகாப்பு அலுவலர் சைமன் மோர்கன் தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு அரச குடும்பத்தின் திருமணத்திற்காக அதிக அளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.