உள்நாட்டு போரால் சூடானிலில் இருந்து வெளியேறிய 78 ஆயிரம் பேர்

சூடான்: சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.

வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், அந்நாட்டு ராணுவம் மற்றும் ஆர்எஸ்எஃப் ஏ அமைப்பினர், துணை ராணுவப் படைகள் என அழைக்கப்படுபவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது.

ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய இந்த உள்நாட்டுப் போர் இன்னும் ஓயவில்லை. இந்தப் போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், பலர் பாதுகாப்பு கருதி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்கின்றனர்.

அந்த வகையில் சூடானில் இருந்து 78 ஆயிரத்து 598 பேர் எத்தியோப்பியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இது எத்தியோப்பியாவில் குடியேறியவர்களின் மொத்த எண்ணிக்கையில் 46 சதவீதமாகும். இந்த தகவலை ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.