பாகிஸ்தானில் கொட்டித்தீர்க்கும் மழையால் 937 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை 937 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தேசிய அவசர நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கொட்டித்தீர்க்கும் மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இதனால் அங்குள்ள 3 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. பாகிஸ்தானில் 23 மாவட்டங்கள் இந்த பேரிடரால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வீடுகள், கார்கள் நீரில் அடித்து செல்லப்படும் காட்சி மற்றும் கார்கள் வெள்ள நீரில் மிதக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதனிடையே, பாகிஸ்தானில் இந்த பேரிடரில் இதுவரை 343 குழந்தைகள் உள்பட 937 பேர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.