720 ட்ரிக் மூலம் ஸ்கேட்டிங் செய்து அசத்தி உலக சாதனை செய்த 17 வயது சிறுமி

ஆஸ்திரேலியா: உலக சாதனை செய்த சிறுமி… ஆஸ்திரேலியாவில் 17 வயது சிறுமி ஒருவர் 720 ட்ரிக் மூலம் ஸ்கேட்டிங்கில் செய்து அசத்தி உலக சாதனை படைத்துள்ளார்.

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைப்பாங்க தெரியும். அதென்ன 720 ட்ரிக் என்றுதானே நினைக்கிறீர்கள். 720 ட்ரிக் என்பது ஸ்கேட் செய்து பறந்து காற்றில் இரண்டு முறை சுழற்சி செய்து மீண்டும் தரையில் இறங்கி ஸ்கேட் செய்வதாகும்.

பொதுவாக ஸ்கேட்டிங் செய்பவர்கள் பறந்து சென்று ஒரு முறை சுழலுவதையே கஷ்டமாக கருதுவார்கள் அப்படி இருக்கையில் இந்த சிறுமி 2 முறை சுழற்சி செய்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரிசா ட்ரூ, சனிக்கிழமை டோனி ஹாக் வெர்ட் அலர்ட் நிகழ்வின் போது, 720 ட்ரிக் மூலம் ஸ்கேட்போர்டிங் விளையாட்டில் இறங்கிய முதல் பெண் ஸ்கேட்போர்டிங் வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தார்.

உட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் நடந்த போட்டியில் அரிசாவிற்கு முன்னர் சாதனை படைத்து புகழ்பெற்ற ஸ்கேட்போர்டரும் இந்த போட்டியில் கலந்து கொண்டார். 1985ஆம் ஆண்டில் ஹாக் என்ற பெண் இந்த தந்திரத்தை முதன்முதலில் முடித்தார், அதன் பின்னர் இதுவரை எந்த ஒரு பெண்ணும் இந்த சாதனையை அடையவில்லை.

38 ஆண்டுளுக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் இந்த சாதனையை முறியடித்துள்ளார். இவருக்கு இணையதளம் வாயிலாகவும், நேரடியாகவும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.