திண்ம கழிவகற்றல் பயிற்சி வழங்க யாழ்ப்பாணத்திற்கு செல்லும் கனடா நிபுணர்

கனடா: பயிற்சி வழங்க செல்கிறார்... யாழ்.மாநகர சபை திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் வினைத்தறனாக செயற்படுவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்காக கனடா – ரொரன்றோ மாநகரின் துறைசார் நிபுணர் ஒருவரை யாழ்.மாநகரசபைக்கு அனுப்ப நகர முதல்வர் ஜோன்ரொரி (John Tory) உத்தரவாதம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கனடா ரொறன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் (John Tory) வி.மணிவண்ணனுக்குமிடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது யாழ்.மாநகர முதல்வர் மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ரொறன்ரோ மாநகர முதல்வருக்கு தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் ரொறன்ரோ மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் முகாமைத்துவ நிபுணர் ஒருவரினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி அவர் மூலம் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் தொடர்பான பயிற்சிகளையும் அனுபவ பகிர்வுகளையும் வழங்குவதற்கான இணக்கப்பாட்டினை மாநகர முதல்வர் ஜோன் ரொரி வழங்கினார்.

இதற்கான நன்றி தெரிவித்த யாழ்.மாநகர முதல்வர், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநகர முதல்வர் தேர்தலில் மீண்டும் ஜோன் ரொரி வெற்றி பெறவேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மணிவண்ணன் கைது செய்யப்பட்டபோது மாநகர முதல்வர் ஜோன் ரொரி அதற்கு கண்டனம் தொவித்ததுடன் உடன் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் முதல்வர் ஜோன் ரொரியுடனான சந்திப்பில் மாநகர சபை உறுப்பினர் ஜெனிவர் மக்கல்வியும் கலந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.