பெண்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை அரசு எடுத்த முடிவு

இலங்கை : இலங்கை நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இருந்தபோதிலும் இலங்கை அரசு சானிட்டரி நாப்கின் மீதான வரியை குறைத்துள்ளது.


பெண்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை அரசாங்கம் பெண்களின் சுகாதாரப் பொருட்களுக்கான வரிகளைக் குறைத்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஐந்து மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது

மேலும், இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது அதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட பேக்கின் விலை ரூ.50 முதல் ரூ.60 வரை குறைக்கப்படும்.


அது மட்டும் அல்லாமல் ஒரு மூட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை ரூ.260 – ரூ.270 ஆக இருக்கும். இதன் மூலம், சுகாதார பொருட்கள் வாங்க முடியாத பெண்கள் பயனடைவார்கள் என்று இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது.