சட்டசபை கூட்டத்தொடருக்கு பங்கேற்க குழந்தையுடன் வந்த பெண் எம்எல்ஏ

நாக்பூர்: தியோலாலி தொகுதி பெண் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே தனது இரண்டரை மாத குழந்தையுடன் வந்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மராட்டிய குளிர்கால மாநாடு பொதுவாக மாநிலத்தின் 2வது தலைநகரமாக கருதப்படும் நாக்பூரில் நடைபெறும். நாக்பூரில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால மாநாடு நடைபெறவில்லை.

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டுக்கான குளிர்கால மாநாடு நாக்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த தியோலாலி தொகுதி பெண் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே தனது இரண்டரை மாத குழந்தையுடன் வந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரோஜ் பாபுலால் அஹிரே என்ற பெண் எம்.எல்.ஏ.வுக்கு செப்டம்பர் 30-ம் தேதி குழந்தை பிறந்தது. கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.வை அங்கிருந்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே கூறுகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் கொரோனா காரணமாக எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை. இப்போது நான் ஒரு தாய். ஆனால், எனது வாக்காளர்களுக்குப் பதில் சொல்ல வந்துள்ளேன். கூறினார்.