தஞ்சாவூரில் இன்று இலவச மருத்துவ முகாம் நடக்கிறது

தஞ்சாவூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் இன்று இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.

தஞ்சாவூர் அனு மருத்துவமனை சிவகுமார் எம்.டி., டி.எம். மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலர் எஸ்.சி. மேத்தா ஆகியோர் இணைந்து இன்று 3ம் தேதி தஞ்சாவூர் மேலவீதி ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் திருமண்டபத்தில் இலவச மருத்துவமுகாமை நடத்துகின்றனர்.

இந்த மருத்துவமுகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு சுகாதார சோதனைகள், ஈசிஜி, ரத்த குளுக்கோஸ் சோதனை உள்ளிட்ட சோதனைகளும், இலவச மருந்துகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த இலவச மருத்துவ சேவையில் அனைவரும் பங்கேற்று பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.