மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது

சென்னை: வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.


இந்த நிலையில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற 29-ஆம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாகக்கூடும்.

அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.