இலங்கை தமிழர்களுக்காக கனடாவில் நீதிக்கான நடைப்பயணம்

இலங்கைத் தமிழர்களுக்காக கனடாவில் நடை பயணம்... இலங்கையில் காணாமல் போன தமிழர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றிற்கு அழைப்பு விடுக்கக்கோரி கனேடிய நாடாளுமன்றம் நோக்கி ஐந்து பேர் நடை பயணம் ஒன்றை துவக்கியுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்கள் பிராம்ப்டன் நகர கவுன்சில் முன் ஒன்று திரண்டனர்.

’நீதிக்கான நடைபயணம்’ என்ற அந்த நடைபயணத்தில் ஐந்து பேர் பங்கேற்கிறார்கள். கடந்த சனிக்கிழமையன்று தங்கள் நடை பயணத்தை அந்த ஐந்துபேரும் தொடக்கி உள்ளனர்.

14 நாட்கள், 150 மணி நேரங்கள் நடந்து, 424 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் குறித்த விசாரணை ஒன்றை துவக்கக்கோரி புகார் மனு ஒன்றை அளிக்க இருக்கிறார்கள்.