சுவீடனில் சுரங்க நிறுவனம் அரிதான கனிமத்தை கண்டுபிடித்தது

சுவீடன்: அரிதான கனிமம் கண்டுபிடிப்பு... சுவீடனை சேர்ந்த சுரங்க நிறுவனம் மிகவும் அரிதான கனிமம் ஒன்றை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய ஊக்கமாக கருதப்படுவதுடன், சீனாவை சார்ந்து இருப்பதை குறைக்க உதவும் என்றும் சுவீடனின் சுரங்க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மின் வாகன உற்பத்திக்குப் பயன்படும் உலகின் அரிய தாதுவாக கருதப்பபடும் இந்த புவி கனிமம் சுவீடனில் பசுமை மாற்றத்தை செயல்படுத்த , முக்கியமான மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான , கட்டுமான தொகுதியாக மாறக்கூடும் என சுரங்க நிறுவன அதிகாரி மோஸ்ட்ரோம் கூறியுள்ளார்.

இந்த புதிய கனிமம் ஸ்காண்டியம் , யட்ரியம் மற்றும் 15 லாந்தனைடுகள் உள்ளிட்ட 17 உலோகங்களை உள்ளடக்கியது ஆகும் .