கனடா நிறுவனம் கட்ட உள்ள நிலவு வடிவ சொகுசு ரிசார்ட்

துபாய்: கனடா நிறுவனம் கட்ட உள்ள மூன் வேர்ல்ட்... துபாயில் உள்ள கனடா கட்டடக்கலை நிறுவனமான ‘மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ்’ நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு உல்லாச விடுதி ஒன்றை கட்டவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

அதற்கான வடிவத்தை வடிவமைத்தும் உள்ளனர். சுமார் 735 அடி அளவில் 48 மாதங்களில் இது கட்டப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனை பூமியிலேயே விண்வெளியில் இருப்பது போல் உணரும் அனுபவத்தைத் தரும் சுற்றுலாத்தலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர். `மூன் துபாய்’ என்று குறிப்பிடப்படும் இந்தத் திட்டம் துபாயின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று கட்டடக்கலை நிறுவனம் கூறியிருக்கிறது.

அதாவது விருந்தோம்பல், பொழுதுபோக்கு இடங்கள், கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற துறைகளில் `மூன் துபாய்’ திட்டம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது வெற்றிகரமான நவீன கால சுற்றுலா திட்டம் என்றும், இந்த பிராண்ட் விழிப்புணர்வு மூலம் துபாய்க்கான வருடாந்த சுற்றுலா வருகைகள் இரட்டிப்பாகும் என்றும் மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸின் நிறுவனர் சாண்ட்ரா ஜி மேத்யூஸ் கூறியிருக்கிறார்.

இந்த அல்ட்ரா சொகுசு `மூன் துபாய்’ கட்டிடம் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பட்ஜெட் செலவில் தயாரிக்கப்படவுள்ளதுடன் இதனால் வருடத்திற்கு 1.8 பில்லியன் டொலர் வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அந்த நிறுவனம் அங்கு ஸ்கை வில்லாஸ் என்ற பெயரில் குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்படவுள்ளது. சுமார் 144 வீடுகள் கட்டப்படும் என்றும் அதில் வீடு வாங்குபவர்களுக்கு மூன் ரெசார்ட் கிளப்க்கு தனிப்பட்ட உறுப்பினர் உரிமம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுபோன்று உலகின் வட அமெரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் மூன் அல்ட்ரா சொகுசு ஹோட்டல் கொண்டுவரப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.