அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

பியூனஸ் அய்ரிஸ்: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அர்ஜென்டினா அருகே 588 கி.மீ. ஆழத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், 'நெருப்பு வளையம்' என்றழைக்கப்படும் பகுதியில் அர்ஜென்டினா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.