பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


பிலிப்பைன்ஸ் : பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா. இங்கு ஏராளமான மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மணிலாவின் தெற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரிலிருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனை அடுத்து இந்நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. எனவே இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குழுங்கின.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.