வெளிநாட்டு மதுபானங்களின் விலை திடீர் அதிகரிப்பு

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேச மாநிலத்தில் வெளிநாட்டு மதுபான விற்பனையை குறைக்கும் பொருட்டு அதன் விலை உயர்வு .. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மதுபானங்களை காட்டிலும் வெளிநாட்டு மதுபானங்களை தான் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர்.

இதனால், உள்ளூர் மதுபானங்களின் மவுசு மிகவும் குறைய ஆரம்பிக்கிறது. எனவே இதனை, சரி கட்டும் விதமாக உத்தரபிரதேச மாநிலத்தில் வெளிநாட்டு மதுபான விற்பனையை குறைக்க புதிய யுக்தியை கையாண்டு உள்ளனர். அதாவது, மாநிலத்தில் தற்போது 3,854 ரக வெளிநாட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இது மட்டுமல்லாமல், கடந்த ஆண்டில் விஸ்கி, ஓட்கா, ரம் மற்றும் ஜின் போன்ற மதுபானங்கள் 199 ரகங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 573 ரகமாக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டு ரகங்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு வெளிநாட்டிலிருந்து உள்நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது நிறுவனம் கட்டாயமாக முதன்மை இறக்குமதியாளரிடமிருந்து அதிகார கடிதத்தை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெளிநாட்டு மதுபானங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.