ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அரசிடம் புகார் ஏதுவாக தொலைபேசி எண் அறிமுகம்

சென்னை: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதன் வாயிலாக மக்கள் மாதந்தோறும் அருகில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டு உபயோகப் பொருட்களை பெற்று பயன் அடைந்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சமீப காலமாக மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடையில் வாயிலாகவே மக்களை வந்தடைகிறது.இந்நிலையில் ரேஷன் அரிசியை பிற இடங்களுக்கு கடத்தல் மற்றும் பதுகுதல் ஆகிய நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி கொண்டு வருகிறது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அரிசியை முறையாக விநியோகம் செய்யாமல் அதை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக கடத்தப்படுகிறது. எனவே இதை தடுக்கும் நோக்கில் மாநில எல்லைகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இதுவரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் மக்கள் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அரசிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் 1800 599 5990 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.