தனிமைப்பகுதிகளை தவிர பிற பிரதேங்களை விடுவிக்க நடவடிக்கை

இராணுவத் தளபதி தகவல்... கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் தவிர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட ஏனைய பிரதேசங்களை அடுத்த வாரமளவில் விடுவிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் விடுவிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான காரணிகளை ஆராய்ந்து வருவதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் நாட்டில் எங்கும் அமுலாக்கப்படவில்லை என்றும் தற்போது கம்பஹாவில் 7 பொலிஸ் பிரிவுகளும் கொழும்பு மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசணைக்கு அமைவாக பொலிஸ் பிரிவு முழுவதும் தனிமைப்டுத்துவதா அல்லது அதன் சில பகுதிகளை மாத்திரம் தனிமைப்படுத்துவதா என்பது தொடர்பாக ஆராயப்படுகின்றன.

இதன்படி, மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளை அடுத்த வாரத்தில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.