37 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பென்னாகரம்: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலம் ஒகேனக்கல் ஆகும் . ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

இதையடுத்து கர்நாடகம் மற்றும் கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பெய்த மிக கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

எனவே இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து இந்த நிலையில் 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்த நிலையில், 37 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.