பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட பலரும் அனுமதி கேட்டதை அடுத்து சென்னை நீதிமன்றம் பல நிபந்தனை விதிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி தினத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லை. மேலும், விழா கொண்டாட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் விநாயகர் சதுர்த்தி களையிழந்து காணப்பட்டது.

இதனை அடுத்து இந்த ஆண்டு கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தியை மிக சிறப்பாக கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட பலரும் அனுமதி கேட்டதை அடுத்து சென்னை நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உள்ளது.

நீதிமன்ற நிபந்தனைகள்: விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆடல் நிக்லஸிகளில் ஆபாச நடனங்களோ, அநாகரீகமான உரையாடல்களோ நடத்த கூடாது. ஒரு அரசியல் கட்சி, சாதி, சங்கம் போன்றவற்றை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது உரையாடல்களோ, அவர்களை விமர்சிக்கும் விதமான நடனங்களோ இடம் பெறக்கூடாது

மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள கூடியவர்கள் மது அருந்தல், குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது. கடுமையான நிபந்தனைகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது. அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களின் படங்களோ, அல்லது பிளக்ஸ் பேனர்களும் இருக்க கூடாது. இந்த விழாவானது என மதம் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். மேலும் சாதி ரீதியாக எந்த பாகுபாடும் காட்ட கூடாது.