பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்- விஜய் வசந்த்

வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய புரெவி புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

வங்க கடலில் உருவாகி உள்ள புதிய புரெவி புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் எனவும், கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பது அவசியம். மேலும் விவாசாயிகள் விவசாய காப்பீடு செய்து கொள்ள வேண்டும். கடலோர கிராம மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மிகவும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்க வேண்டும்.

மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.