மிதக்கும் நகரத்தை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ள இத்தாலி நிறுவனம்

இத்தாலி: இத்தாலியை சேர்ந்த நிறுவனம் ஒன்று மிதக்கும் நகரத்தை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.


இத்தாலியை சேர்ந்த கப்பல் கட்டுமான டிசைனர் பியர்பாவ்லோ லஸ்ஸாரினி நிறுவனம் தற்போது புதிய கப்பல் ஒன்றை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை கப்பல் என்று சொல்வதை விட மிதக்கும் நகரம் என்றே சொல்லலாம். பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்களான “Yacht” எனப்படும் வகையில் கட்டப்படும் இந்த மிதக்கும் நகரத்தில் “பாஞ்சியா யாச்ட்” என பெயரிடப்பட்டுள்ளது.

335 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கண்டங்கள் ஒரே நிலப்பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஒற்றை நிலத்தின் பெயர்தான் “பாஞ்சியா”. இந்த ஆமை வடிவ பாஞ்சியா நகரம் கண்டம் விட்டு கண்டம் கடலில் பயணிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த கப்பலின் கட்டுமான பணிகளை லஸ்ஸாரினி நிறுவனம் சவுதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல்லா துறைமுகம் அருகே உள்ள கடல் பகுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.