உத்தர பிரதேச அரசு இலவசமாக 2 சிலிண்டர்களை வழங்க உள்ளதாக அறிவிப்பு

உத்தர பிரதேசம் : நாட்டில் தற்போது, சிலிண்டர் எரிவாயு விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சாமானிய மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக் தவித்து கொண்டு வருகின்றனர். இவர்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் விதமாக தற்போது உத்தரபிரதேச அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு 2 இலவச சிலிண்டர்களை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரம் மற்றும் தளபாடத்துறைக்கு ஹோலி பண்டிகையில் முதல் இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்க வேண்டும் என உத்தரபிரதேச மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால் இந்த இலவச சிலிண்டர் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச சிலிண்டர் பெற உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. அத்துடன் குறைந்தபட்சமாக 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதே போன்று பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் பிஎம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.