பிரான்ஸ் நாட்டின் பனிச்சரிவு .. 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயம்

பிரெஞ்சு: பிரான்ஸ் நாட்டின் பனிச்சரிவால் 4 பேர் உயிரிழப்பு .... ஆல்ப்ஸ் மலையில் மான்ட் பிளாங்கின் தென்மேற்கே ஏற்பட்ட பனிச்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த பனிச்சரிவில் சிக்கிய நால்வரும் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தவர்கள், மேலும் சிலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் உள்ளூர் பிரான்ஸ்-ப்ளூ வானொலி மையம், இந்த பனிச்சரிவின் அளவை 1,000 மீட்டர் (3,280 அடி) நீளமும் 100 மீட்டர் (328 அடி) அகலமும் கொண்டதாக இருக்கலாம் என்று கணித்துள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அவர்கள் தனது ட்விட்டரில், மீட்புப் பணியாளர்கள் மேலும் உயிரிழப்புகளைத் தேடி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார்.