டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு தடை

புது டெல்லி : டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டின் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து உயர்ந்து வரும் மாசுபாட்டால், சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்த டெல்லியில் கெஜ்ரிவால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.


இந்த நிலையில், டெல்லியில் மற்ற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட Uber ,OLA மற்றும் பிற ஆப்-அடிப்படையிலான வாகனங்கள் நுழைவதை டெல்லி அரசாங்கம் தடை செய்து உள்ளது. இந்த அறிவிப்பை டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, டெல்லியில் டிஎல் எண்ணுடன் கூடிய ஆப்-சார்ந்த வாகனங்கள் மட்டுமே இயங்கும். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கோபால் ராய் தெரிவித்தார்.