பொலிவியாவின் முக்கிய நகரங்களில் தெருக்களில் கிடந்த சடலங்கள்

தென் அமெரிக்காவின் பொலிவியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் கடந்த 5 நாட்களில் 400’க்கும் மேற்பட்ட சடலங்கள் தெருக்கள் மற்றும் வீடுகளில் கண்டறியப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உலகளவில் 48 லட்சத்தைக் கடந்தும், இறப்புகளின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதில் முதலிடத்தில் அமெரிக்கா 39 லட்சம் பாதிப்புகளுடனும் 1 லட்சத்து 44 ஆயிரம் மரணங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் பிரேசில், இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகம் இருந்தாலும், மற்றொரு பக்கம் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நோய்த்தொற்றுக்கள் அதிகம் இருந்தாலும் இறப்புகள் குறைவாக இருக்கக் காரணம், சோதனைகளை அதிகரித்து முறையான சிகிச்சை வழங்கப்பட்டது தான் காரணம் என கூறப்படுகிறது. சில நாடுகளில் குறைவான சோதனையின் காரணாமாக சமூகப் பரவலாக உருவெடுத்து, அதிக உயிர்களை பழிவாங்கியுள்ளது. சில நாடுகளில் தொற்றுக்கள் முறையாக கண்டறியப்படாமலும் கண்டுகொள்ளப்பாடாமலும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கான சமீபத்திய உதாரணமாக தென் அமெரிக்காவின் பொலிவியா கைகாட்டப்பட்டுள்ளது. பொலிவியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் கடந்த 5 நாட்களில் 400’க்கும் மேற்பட்ட சடலங்கள் தெருக்கள் மற்றும் வீடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் எதுவும் இல்லாத நிலையில், மர்மமான முறையில் இவர்கள் உயிரிழந்துள்ளதாலும், இவர்களில் பெரும்பாலோனோருக்கு கொரோனா இருக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் சோதனையின் முடிவிலேயே இது குறித்து உறுதியாக அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் சமூக பரவல் ஏற்பட்டு அந்நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.