பயணியே விடுத்த வெடிகுண்டு மிரட்டல்... போலீசார் விசாரணை

ஐதராபாத்: வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு... ஐதராபாத்தில் இருந்து சென்னை செல்லும் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்த சில நொடிகளில் விமான நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியவர், சென்னை விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்றும் கூறி அழைப்பை துண்டித்து விட்டார். இதை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சென்னை விமானம் புறப்பட வேண்டாம் என உத்தரவிட்டனர். மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானத்தின் உள்ளே சென்று சோதனை செய்தனர். நீண்ட நேர தேடுதலில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை. பின்னர் வெளியான வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விமான நிலையத்திற்கு வந்த தொலைபேசி எண்ணையும் சோதனை செய்தனர். அதே விமானத்தில் பயணித்த பயணி ஒருவரே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்தேன். ஆனால் விமான நிலையத்தை அடைய தாமதமானது.

இதனால், அதிகாரிகள் என்னை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. பயணிக்க முடியவில்லை. ஆத்திரத்தில், விமான கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.