வணிகம் செய்ய முடியாது; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அதிபர் டிரம்ப் அதிரடி... சீனாவுடன் வணிகம் செய்ய முடியாது என்றும், சீனாவுடனான வணிகத் தொடர்பைத் துண்டிக்க முடியும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், சீனாவுடன் வணிகம் செய்ய வேண்டியதில்லை என்றும், அமெரிக்காவை முறையாக நடத்தாவிட்டால் சீனாவுடனான வணிகத் தொடர்பைத் துண்டிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஜனவரியில் முதற்கட்ட வணிக உடன்பாட்டை எட்டுவதற்கு முன், இரு நாடுகளிடையே வணிகப் போர் உச்சத்தில் இருந்ததும், கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில் சீனா மீது அதிருப்தி அடைந்ததால் இரண்டாம் கட்டப் பேச்சுக்கான வாய்ப்பே இல்லாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு முறையான சமநிலையான போட்டியை அனுமதிக்காவிட்டால் வணிக உறவுகளைத் துண்டிக்கப் போவதாக நிதியமைச்சர் ஸ்டீவன் மினுச்சின் ஜூன் மாதத்திலேயே தெரிவித்ததும் குறிப்பிடத் தக்கது.