மெக்சிகோவில் கொரோனாவால் பாதித்து ஒரே நாளில் 1092 பேர் பலி

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல் கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 103 பேர் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து மெக்கிகோவில் மொத்தம் பலி எண்ணிக்கை 11,792 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 3,912 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,01,238 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவலில் மெக்சிகோ தற்போது உச்சகட்ட நிலையில் உள்ளது என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று துணை சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கட்டெல் தெரிவித்தார்.

மெக்சிகோவில் கொரோனா வைரஸுக்கு சந்தேகத்திற்கிடமான அனைத்து வழக்குகளுக்கும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

கனடா: கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில், 103 பேர் உயிரிழந்ததோடு, 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,498 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,085 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 34,539 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,048 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 1,721 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.