மகாராணி 2ம் எலிசபெத் இறுதிகிரியை ஏற்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் கனடா

கனடா: முக்கி பங்கு வகிக்கும்... மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிக் கிரியை ஏற்பாட்டுப் பணிகளில் கனடா மிக முக்கியமான பங்கினை வகிக்கும் என ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சிரேஸ்ட உறுப்புரிமை நாடு என்ற வகையில் கனடா முக்கிய பங்கினை வகிக்கும் என பிரித்தானியாவிற்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ரால்ப் குட்டேல் (Ralph Goodale) தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதிநிதிகள் ஏற்கனவே பிரித்தானியாவிற்கு வருகை தர ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கனேடிய றோயல் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் எதிர்வரும் ஒரிரு நாட்களில் பிரித்தானியாவை வந்தடைவர் என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் ஆளுனர் நாயகம் சிமோன் மற்றும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோர் அதிகாரபூர்வ விஜயம் செய்ய உள்ளனர். கனேடிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.