பூச்சி மருந்துகடை பெண் ஊழியரை தாக்கிய 4 பெண்கள் மீது வழக்கு

இந்தூர்: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், பெண் ஒருவரை மதுபோதையில் கண்மூடித்தனமாக தாக்கிய 4 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்தூரின் தேனு சந்தையில் உள்ள பூச்சி மருந்து கடையில் விற்பனையாளராக பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவில், மதுபோதையில் இருந்த 4 பெண்கள், சாலையில் அவரை சூழ்ந்து தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி பெல்ட்டால் அடித்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான பெண், தன்னை எந்த காரணமும் இல்லாமல் நால்வரும் தாக்கியதாக போலீசில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மது போதையில் பொது இடத்தில் பெண்கள் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது. ஆண்கள் போல் பெண்களும் குடி போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் சமுதாய சீர்கேடுதான் ஏற்படும் என்று வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.