CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியாக வாய்ப்பு

சென்னை : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை புதிய வடிவில் நடத்தியது. பள்ளி மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதித் தேர்வு 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

அதன்படி டெர்ம் 1 தேர்வுகள் கடந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்து இந்த ஆண்டு துவக்கத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2வது டெர்ம் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைந்துள்ளதால் மாணவர்கள் இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியாகலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. தற்போது கடந்த கல்வியாண்டுக்கான இறுதி தேர்வு முடிவுகள் மாணவர்களின் வருகையை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்படும். இதற்கிடையில் CBSE வாரியம் மாணவர்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீட்டை முடித்து இப்போது முடிவுகளை தொகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in மற்றும் results.nic.in என்ற இணையதளங்கள் மூலம் அவற்றை சரிபார்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர மாணவர்கள் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு முடிவுகளை SMS மூலமும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாணவர்கள் cbse12<space>roll number<இடம்>பிறந்த தேதி<space>பள்ளி எண்<space>மைய எண் ஆகியவற்றை டைப் செய்து SMS வாயிலாக 7738299899 எண்ணுக்கு அனுப்பி வைப்பதன் மூலமும் முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.