சீன பொருட்களின் தரம் குறித்து விபரங்கள் கேட்கும் மத்திய அரசு

சீன பொருட்கள் குறித்து விபரம் கேட்ட மத்திய அரசு... சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான மற்றும் குறைந்த தரம் கொண்ட பொருட்களின் விவரங்களை, தொழில்துறையிடம் இருந்து மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் பிரிவில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சீனாவுடனான பொருளாதார உறவை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கை மற்றும் சுவர் கடிகாரங்கள், கண்ணாடி கம்பிகள் மற்றும் குழாய்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவை குறித்து அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அச்சிடும் மை, வார்னீஷ் உள்ளிட்ட வண்ணப்பூச்சுகள் மற்றும் சில புகையிலை பொருட்களின் விவரங்களும் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் ஏற்பட்டு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்தியா முழுவதும் சீன பொருட்கள் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதற்கு முன்பே சீன பொருட்களால் ஆபத்து ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும் தெரிவித்து இருந்தனர். அதில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அரசு சீன பொருட்களின் தரம் குறித்து விபரம் கேட்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.