இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய தடை விதிப்பு


இந்தியா: இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதியால் மக்கள் எளிதாக இருந்த இடத்திலேயே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். பல தொழில்நுட்பம் வாயிலாக மற்றவர்களின் செல் போன்களை ஹேக் செய்ய முடியும். இதன் மூலம் மறைமுகமாக பலரது ரகசிய தகவல்களை அறிய முடியும். ஆனால் இது சட்ட ரீதியாக விரோதமான செயலாகும்.

இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் இதனை தடுக்க மத்திய அரசு சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் தகவல் தொடர்பை செயலிழக்கச் செய்யும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் கொள்முதல் செய்ய முடியாது. இதுகுறித்து விளம்பரம் செய்வது, விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதி செய்வதும் சட்ட விரோதமானது.

அரசின் அனுமதி இல்லாமல், செல்போன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் சிக்னல் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் மற்றும் இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது.

சமிக்ஞை பூஸ்டர்களைப் பொறுத்தவரை, உரிமம் பெறப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைத் தவிர பிற நிறுவனங்களோ அல்லது தனிநபர்களே செல்பேசி சமிக்ஞை பூஸ்டர்களை வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது. இந்த கம்பியில்லா ஜாமர்களை யாரும் இணையவழி தளத்தில் விற்பனை செய்யக்கூடாது என தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.