இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் ...தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த கனமழை வருகிரியா நவ.2 ஆம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், நகரின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தாலும் இயல்பான வெப்பநிலையை காட்டுலும் கூடுதலாக வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர்.

இதையடுத்து சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பொழியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கடலோர பகுதிகளில் புயல் எதுவும் உருவாகாத காரணத்தினால் மீனவர்கள் கடலுக்குள் வழக்கம் போல மீன் பிடிக்க செல்லலாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.