தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணிநேரத்தில் வடபுதுப்பட்டு, வேப்பூரில் தலா 13 செ.மீ., கட்டுமயிலூர், சிதம்பரத்தில் தலா 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 24 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.