கனமழை பெய்யும் வாய்ப்பு... வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

கடந்த 29ம் தேதி வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கியது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைபெய்து வருகிறது. திருவள்ளூர் காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர் திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.