தெற்கு வங்காள மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

இந்தியா: வங்ககடலில் கடந்த சில நாட்களுக்கு முன் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதன் பின் காற்றழுத்த மண்டலமாக மாறி பின் நேற்று (அக். 24) சித்ராங் புயலாக மாறியது. இந்த புயல் இன்று வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 மணி நேரத்திற்கு முன்பாகவே நேற்று இரவு இரவு 9.30 மணி முதல் 11.30 வங்கதேசத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சித்ராங் புயல் காரணமாக அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அந்த 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது .

இதனை அடுத்து வடமேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள சித்ராங் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து செவ்வாய்க்கிழமை மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து இந்த புயல் காரணமாக பர்குனா, நரைல், சிராஜ்கஞ்ச் மற்றும் போலா ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக 5 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த புயலால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.