நடிகர் ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை ரசிகர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ரஜினிகாந்தின் வீட்டை சுற்றி வித விதமான போஸ்டர்களில் வித்தியாசமான வாசகங்களுடன் அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- ரஜினிகாந்த் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து என அவர் தெரிவித்துள்ளார்.