விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர்!

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

25-ந் தேதியன்று (இன்று) பிறந்தநாளை கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தங்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த்துக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.