மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இந்தியா: இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும், இலங்கை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றதற்குப் பிறகு முதன் முறையாக 2 நாள் பயணமாக இன்று இந்தியா வரவுள்ளார். இந்நிலையில், மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.


இதையடுத்து அதில், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார மற்றும் கலாச்சாரத் பூகோளரீதியான நெருக்கம் மற்றும் பொருளாதார மற்றும் வரலாற்று தொடர்புகள் காரணமாக நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் 2 முக்கிய பிரச்சினைகளான கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது பற்றியும் , இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி. அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் பற்றியும் இந்தியப் பிரதமர் பேசி, தீர்வு காணுமாறு கோரி உள்ளார்.