இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட விசா குறித்து சீன தூதரகம் தகவல்

புதுடெல்லி: 2023ம் ஆண்டின் முதல் பாதி வரை சீனா செல்லக்கூடிய இந்தியர்களுக்கு, 71,600க்கும் மேற்பட்ட விசாக்களை சீன தூதரகம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் ஜியாஜியன் கூறியதாவது: வணிகம், படிப்பு, சுற்றுலா, வேலை மற்றும் குடும்பத்துடன் ஒன்றிணைதல் போன்ற நோக்கங்களுக்காக சீனா இந்தியர்களுக்கு விசா வழங்குகிறது.

இதன்படி, 2023ம் ஆண்டின் முதல் பாதி வரை சீனா செல்லக்கூடிய இந்தியர்களுக்கு, 71,600க்கும் மேற்பட்ட விசாக்களை சீன தூதரகம் வழங்கியுள்ளது. கடந்த மே மாதம், சீனா செல்லக்கூடிய இந்தியர்களுக்கு, 60,000க்கும் மேற்பட்ட விசாக்களை சீன தூதரகம் வழங்கியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கடந்த மார்ச் மாதம் சீனா அறிவித்திருந்தது.